Wednesday 16 November 2016

மாகாளிக்கிழங்கு ஊருகாய்


மாகாளிக்கிழங்கு ஊருகாய் பெயரில் "கிழங்கு" என்று இருந்தாலும் பொதுவாகக் கிழங்கு வகைகள் கொடுக்கும் வாயுத் தொல்லைகள் எதுவும் தராது இந்த ஊருகாய்.

 ரத்தம் சுத்தமாகும், ரத்த அழுத்தத்தை சீராக்கும், நார் சத்து கொண்டது, எண்ணெய் இல்லாமல் அதிக காரம் இல்லாமல் வயதானவர்களும் சாப்பிடக் கூடிய ஒரு உன்னதமான ஊருகாய் இது.

 கொஞ்சம் பொறுமையும் ஆர்வமும் இருந்தால் நல்ல ஊருகாய் நம் கையில்.

தேவையான பொருள்கள்: 

 மாகாளிக்கிழங்கு -- அரை கிலோ
 கல் உப்பு -- தேவையான அளவு [ குறைவாக இருந்தால் பிறகு சேர்த்துக் கொள்ளலாம்.]
மஞ்சள் தூள் - 2 ஸ்பூன்
 கெட்டித்தயிர் -- 200 மில்லி லிட்டர்
 பச்சை மிளகாய் -10
 எலுமிச்சை பழம் - 4

 செய்முறை:

 மாகாளிக் கிழங்கை நன்றாகச் சுத்தம் செய்து வெளித் தோல் சீவ வேண்டும். மறுபடியும் ஒரு முறை நீரில் சுத்தம் செய்யவும். கிழங்கை நடுவில் பிளந்தால் ஒரு தண்டு போன்று இருக்கும்.[மரவள்ளிக்கிழங்கு போலவே] அதை நீக்கி விடவும். பிறகு சுற்றியுள்ள கிழங்கை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

சற்று புளித்த தயிர் விட்டு நன்றாகக் கலந்து விடவும். ஒரு பத்து நாட்கள் ஊரினால் சாப்பிட உகந்ததாகத் தயாராகிவிடும். காரம் அதிகம் வேண்டுமென்றால் மிளகாய் வற்றல் தேவையான அளவு அரைத்து விடலாம்.


 பித்தம், வாந்தி....நீங்கும். நோய்வாய்ப் பட்டவர்களுக்கு வாய்க்கு ஏற்புடையது. பொதுவாக ஊருகாய்களின் பக்க விளைவுகள் எதுவும் இதில் இல்லை என்பது குறிப்பிடத் தக்கது. வாசனை நன்றாக இருக்கும், அதுவே சிலருக்குப் பிடிக்காது என்பர்.

பிடித்தவர்களுக்கு அமிர்தம்.