Thursday 26 January 2017

வாஸ்து-பசு மற்றும் எருதுகள்

பண்டைக் காலத்தில் [ஆரம்பித்த உடனேயே பேஜ் ஸ்க்ரோல் செய்து ஓட வேண்டாம், கொஞ்சம் வாசித்துப் பாருங்கள், பிடித்தால் சொல்லுங்கள், பிடிக்கா விட்டாலும் சொல்லுங்கள், 'ஜவ்வு' என்று திட்டினாலும் தாங்க்ஸ்]
தமிழ் நாட்டில், ஏன் இந்தியா முழுவதிலும் அநேக கிராமங்களில், ஒவ்வொரு வீட்டு வாசலிலும், பசு, எருது பூட்டி வைப்பது கௌரவமாகக் கருதப் பட்டது.  அதுவே வாஸ்து என்றும் நம்பப் பட்டது.

பெருந்தலைவர் காமராஜர் சொன்னாராம், "ஒரு வீட்டில் ஒரு முருங்கை மரமும், ஒரு பசுவும் இருந்தால், அந்தக் குடும்பத் தலைவி  தன் குடும்பத்தை சுலபமாகக் காப்பாற்றுவாள்."

அது போலவே அநேகம் பெண்மணிகள் தங்கள் குடும்பத்தை, பிள்ளைகளை, கஷ்டம் தெரியாமல் பேணிக் காத்திருக்கின்றனர்.

இன்று இதெல்லாம் சாத்தியமா? என்றால் சாத்தியமே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.  இடம் ஒரு முதல் பற்றாக்குறை.  அடுக்கு மாடிக் குடியிருப்புகள்  [முன்பெல்லாம் மரங்கள்]  வானோங்கி நிற்க, வீட்டிற்கு வாசலையே காணோம், எங்கு செல்வது மாடுகள் வளர்க்க?

சீன வாஸ்து, ஜப்பான் வாஸ்து என்று என்னென்னவோ அதிக விலை கொடுத்து வாங்கி வைக்கின்றனர்.

நாட்டுப்  பசுக்களுக்காகவும் ஜல்லிக் கட்டு காளைகளுக்காகவும் நாம் நடத்திய இந்த அறப் போராட்டம் நல்லதொரு வாஸ்து வாகவே அமைந்து நம் நாட்டிற்கு வளம் சேர்க்கும் என்றே நம்புவோம்.