Friday, 6 May 2016

நெல்லிக்காய் தொக்குநெல்லிக்காய் தொக்கு

தேவையான பொருள்கள்

பெரிய நெல்லிக்காய் - 20
மஞ்சள் தூள் - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மிளகாய் தூள் - 2 அல்லது 3 ஸ்பூன்
கடுகு - தாளிக்க
நல்லெண்ணெய் 100 மில்லி
பெருங்காயம் ஒரு சுண்டைக்காய் அளவு
வெந்தய பொடி - 1 ஸ்பூன் 

செய்முறை

நெல்லிக்காய்களை  எடுத்து நன்றாக அலம்பி சுத்தமான நீரில் போட்டு மஞ்சள் தூள், மற்றும் உப்பு சேர்த்து வேக விடவும். சூடு குறைந்ததும் விதைகளை நீக்கி  மிக்ஸீயில் அரைத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் நல்லெண்ணெய் விட்டு பெருங்காயம், கடுகு தாளித்து பின் அரைத்த விழுது, வெந்தய பொடி  மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்றாகக் கிளரவும்.  அடி பிடிக்காமல் நன்றாகக் கிளறி பந்து போல் வரும் போது அடுப்பில் இருந்து இறக்கி ஆர விட்டு கண்ணாடி அல்லது பீங்கான்  ஜாடியில் எடுத்து வைக்கவும்.

பின் குறிப்பு: 

கண்ணாடி அல்லது பீங்கான் நல்ல பாதுகாப்பானவை.  ப்ளாஸ்டிக் தவிர்கப்பட வேண்டும்.
உப்பு, மஞ்சள், மிளகாய் தூள் எண்ணெய் இவை அனைத்தும் ப்ரிஸர்வேடிவ்.  தொக்கு வீண் ஆகாமல் காப்பதும் இவையே.  அவரவர் ருஸிக்குத் தகுந்த படி சேர்க்கலாம்.  வெந்தய பொடி நல்ல நறுமணம் தரும். வயிற்றுப் புண்களை ஆற்றும்.  

Friday, 8 April 2016

ஆரோக்கியச் சிரிப்பு:

ஆரோக்கியச்  சிரிப்பு::

அநேகம் பேரைப் பார்க்கிறோம்.  அத்தனை பேருமா சிரித்த முகத்துடன் இருக்கிறார்கள்?
சிரித்தால் என்னஆகும்?
சிரிக்காவிட்டால் என்ன ஆகும்?
நல்ல படித்தவர்கள், மருத்துவர்கள், பெரிய பதவியில் இருப்பவர்கள் . பலரையும் கவனித்தால் சிரிப்பு என்ற ஒன்றையே மறந்தவர்களாக வலம் வருகிறார்கள்.

BALTIMORE பல்கலைக் கழகத்தில் ஓர் ஆய்வு நடத்தினார்களாம். இதய நோயால் பாதிக்கப் பட்ட  ஒரு 100 பேரில் 40 பேர் வாழ்வில் சிரிக்கவே மறந்தவர்களாம்.
தினப்படி காலை எழுவது, சிற்றுண்டி, அலுவலகம் செல்லுதல், வேலை, மாலை வீடு திரும்புதல், இரவு சாப்பாடு, தூக்கம்...

இதய நோய் வராமல் பாதுகாக்க நீங்கள் என்னென்ன முயற்சிகள் எடுப்பீர்களோ, உதாரணமாக--மாடிப்படி [லிஃப்ட் தவிர்தல்] உபயோகித்தல், பச்சை காய் கனிகளை உண்ணுதல், கீரை வகைகளை உணவில் அடிக்கடி சேர்த்தல், நடைப் பயிற்சி, இப்படி....

நன்றாகச் சிரிக்கவும் செய்யுங்கள்.

பக்க விளைவுகள் இல்லாதது சிரிப்பு

சிரிப்பு பல விஷயங்களை நேராக்க உதவும்.
இயந்திரங்கள் துரு பிடிக்காமல் இருக்க,  தேய்மானம் ஆகாமல் இருக்க,  வேகமாக இயங்க அவற்றிற்கு  எண்ணெய் இடுவது போல நாம் சிரிப்பால் நம்  உள் உறுப்புகளுக்கு எண்ணெய் இடுகிறோம்.
ஆங்கிலத்தில் இதற்கு LUBRICATION என்று சொல்லுவர்.
ENDOCRINE GLANDS சரியாக வேலை செய்யும்.
வயிறு உருள உருள சிரிக்க வேண்டும்.  கெட்ட கொழுப்பு கரைய உதவும்.
இதயத்திற்க்கும் நுரையீரலுக்கும் நல்ல மஸாஜ் கிடைக்கிறது.  .

பிறர் மனம் புண்படும்படி  கேலி செய்து சிரிக்காதீர்.
[மஹபாரதத்தில் த்ரௌபதி சிரித்ததை நினைவில் கொள்க]

சமூகவலை தளங்களில் நிறைய சிரிக்க வைக்க துணுக்குகள் வருகின்றன.  வரவேர்க்கத் தகுந்தவை.

ஹாஸ்ய ரசனை மஹா பெரியவர் போன்ற  மஹான்களுக்கும்இருந்திருக்கிறது, நினைவில் கொள்க.

தனியாக மட்டும் சிரிக்காதீர்!!!
<script>
  (function(i,s,o,g,r,a,m){i['GoogleAnalyticsObject']=r;i[r]=i[r]||function(){
  (i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
  m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
  })(window,document,'script','https://www.google-analytics.com/analytics.js','ga');

  ga('create', 'UA-47810302-2', 'auto');
  ga('send', 'pageview');

</script>

Sunday, 3 April 2016

கந்த சஷ்டி கவச மகிமை

தேவ ராய சுவாமிகள் அருளிச் செய்த கந்த சஷ்டிக்  கவசம் சக்தி  மிக்கது.

சாதாரணமாகவே மந்திரங்களுக்கு சக்தி உண்டு.  குறிப்பாக சஷ்டிக் கவசம் போன்ற ஸ்லோகங்கள் மிகவும் சிறப்பானவை.

பாம்பன் சுவாமிகளே சஷ்டிக் கவசம் படித்த பாதிப்பில் தான் ஷண்முக கவசம் எழுதியதாகச் சொல்லுவார்கள்.

1] இக  பர சுகங்கள் அத்தனையும் கிடைக்கப் பெறலாம்.
2] சிறுவர்கள் சிறுமியர்களுக்கு கந்த சஷ்டிக் கவசம் சொல்லிக்கொடுக்க வாக்கு வன்மை  பெரும். பேச்சாளர்ககளாக வருவார்கள்.
3] தடை இன்றி பாடங்களை வாசிக்க வரும்.  
4] அனைத்து  நோய்களுக்கும்பரம .ஔஷதம்.
5] பக்தி ருசி ஊட்டி  பிள்ளைகளை வளர்க்க உதவும்.
6] சஷ்டி விரதம் இருப்பவர்கள் ஆறு நாட்களும் தன்னால் இயன்ற அளவு கந்த சஷ்டி கவசம் வாசிக்க வேண்டுதல் நிறைவேறும்.  
இப்படி அநேக பலன்கள் சொல்லிக் கொண்டே போகலாம்.   

தமிழை தாய் மொழியாகக் கொண்டவர்கள்,  வரும் கால சந்ததிகள் தமிழை மறக்காமல் இருக்க, வளர்க்க மிகச் சிறந்த  வழிகளுள் ஒன்று  சஷ்டிக் கவசம் வாசித்தல்.

ஒழுக்கம் தானாக வரும்.

<script>
  (function(i,s,o,g,r,a,m){i['GoogleAnalyticsObject']=r;i[r]=i[r]||function(){
  (i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
  m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
  })(window,document,'script','https://www.google-analytics.com/analytics.js','ga');

  ga('create', 'UA-47810302-2', 'auto');
  ga('send', 'pageview');

</script>

Friday, 1 April 2016

வாங்கீ பாத்[கத்திரிக்காய் சாதம்]தேவையான பொருட்கள்:

வடித்த சாதம் 200கிராம்
பிஞ்சு கத்திரிக்காய் கால் கிலோ
வெங்காயம் 2
என்ணெய் 3 ஸ்பூன்
புளி கரைசல் 2 ஸ்பூன்
மஞ்சள் பொடி 1ஸ்பூன்
தனியா பொடி 2 ஸ்பூன்
மிளகாய் பொடி2 ஸ்பூன்
கடுகு, உளுந்து, மிளகாய் வற்றல், - தாளிக்க
 உப்பு தேவைக்கு ஏற்ப
.அலங்கரிக்க கொத்துமல்லி,   தக்காளித் துண்டுகள்.

செய்முறை:

என்ணெய்யில்  கடுகு, மிளகாய் வற்றல், உளுந்து தாளித்து பிறகு பொடியாக நறுக்கி வைத்த வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
ஒரு 3 நிமிடம் வதங்கியதும் நறுக்கி வைத்த கத்திரிக்காய்களைச் சேர்க்கவும்.
மஞ்சள் தூள், தனியா தூள், மிளகாய் தூள், புளி கரைசல், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்
பிறகு சாதத்தை போட்டுக் கிளரவும்.

பின் குறிப்பு:

சாதம் வடிக்க பாஸ்மதி அரிசியும் உபயோகிக்கலாம்.
சிறு தானியங்கள் உபயோகித்தாலும் நல்ல ருசி இருக்கும்.
வாசனைக்கு ஒன்றிரண்டாகப் பொடித்த வேர்க்கடலை சேர்க்கலாம்.
முந்திரி-அவரவர் விருப்பம், வசதி போல.

<script>
  (function(i,s,o,g,r,a,m){i['GoogleAnalyticsObject']=r;i[r]=i[r]||function(){
  (i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
  m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
  })(window,document,'script','https://www.google-analytics.com/analytics.js','ga');

  ga('create', 'UA-47810302-2', 'auto');
  ga('send', 'pageview');

</script>

நூல்கோல் ரைதா:நூல்கோல் ரைதா:

நூல்கோல்  ஒன்றோ அல்லது சிறியதாக இருந்தால் இரண்டோ எடுத்து தோல் சீவி நாலைந்து துண்டுகளாக வெட்டி கொஞ்சம் நீரில் ஒரு  நிமிடம்
 கொதிக்க விட்டு ஆர விடவும்.  பிறகு அவற்றைத் துருவி எடுத்துக் கொள்ளவும்.

இதோடு கொஞ்சம் இஞ்சி வேண்டுமானாலும் துருவி சேர்க்கலாம்.
ஒரு சிட்டிகை உப்பு, மற்றும் மிளகு பொடி , கொத்துமல்லி பொடியாக நறுக்கி சேர்க்கவும்.
இரண்டு கரண்டி தயிர் சேர்த்து பரிமாறவும்.

பின் குறிப்பு:

1] நிறைய பூச்சி மருந்துகள் அடிப்பதால், பீட்ரூட், நூல்கோல், காரட் போன்ற காய் கறிகளை கொஞ்சம் நீரில் கொதிக்க விட்டு பிறகு பயன் படுத்தலாம், அந்த நீரைப்பயன் படுத்த வேண்டாம் என்று கூறுகிறார்கள்.
2] நூல் கோலில் வரும் வாசனை சிலருக்குப் பிடிக்காது, ஆனால் இந்த ரைத்தா நன்றாக இருக்கும்.   சர்கரை நோய் கட்டுப்படுத்த உதவும்.
3]  நிறைய நார் சத்து மிக்கது.

<script>
  (function(i,s,o,g,r,a,m){i['GoogleAnalyticsObject']=r;i[r]=i[r]||function(){
  (i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
  m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
  })(window,document,'script','https://www.google-analytics.com/analytics.js','ga');

  ga('create', 'UA-47810302-2', 'auto');
  ga('send', 'pageview');

</script>

Monday, 28 March 2016

வருவாய் அருள்வாய் குகனே.

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய், வருவாய் அருள்வாய் குகனே.

வருமானமே இல்லாமல் ஜீவனமே கஷ்டமாக இருக்கிறதா?
உழைப்புக்கு தகுந்த ஊதியம் கிடைக்கவில்லையா?
உழைப்பதற்கு மார்ககம் எதுவும் தென்படவில்லையா?
முருக பக்தரா நீங்கள்?

கந்தர் அநுபூதியில் கடைசி ஸ்லோகமாக வரும் மேற்சொன்ன நான்கு வரிகளை வாசித்தாலோ அல்லது மனம் உருகிப் பாடினாலோ அந்தக் குமாரன் அருளுவானாம்.
கந்தர் அநுபூதி என்பது ஞானம் வேண்டிப் பாடப் பெற்றது. இதில் எங்கிருந்து லௌகிகமான பணம் வந்தது என்று கேள்வி கேட்கவேண்டும் என்றால் என்னைக் கேட்க வேண்டாம்.  
 மஹா பெரியவா, ஒரு பக்தருக்குச் சொன்ன உபாயம் இது.
ரசித்துப் படிக்கவும்.

இது பக்தி ருசி!!!!

<script>
  (function(i,s,o,g,r,a,m){i['GoogleAnalyticsObject']=r;i[r]=i[r]||function(){
  (i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
  m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
  })(window,document,'script','https://www.google-analytics.com/analytics.js','ga');

  ga('create', 'UA-47810302-2', 'auto');
  ga('send', 'pageview');

</script>

Sunday, 27 March 2016

காலிஃப்லவர் பக்கோடா ::

  காலிஃப்லவர் பக்கோடா
தேவையான பொருட்கள்:

ஒரு நடுத்தர ஸைஸ் காலி ஃப்லவர்: 1

மைதா:6 தேக்கரண்டி

அரிசி மாவு: 4 தேக்கரண்டி

 CORN FLOUR: 4 தேக்கரண்டி

மிளகாய் பொடி 2 ஸ்பூன்

மஞ்சள் பொடி: 1 ஸ்பூன்

பெருங்காயம் தூள்: ஒரு சிட்டிகை

உப்பு :தேவையான அளவு

செய்முறை:

முதலில் காலி ஃப்லவர்ரை சிறிது காம்போடு மெல்லியதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
கொதிக்கும் நீரில் இவற்றை போட்டு ஒரு துளி மஞ்சள் பொடி, மற்றும் துளி உப்பு சேர்த்து ஒரு இருபது நிமிடம் தட்டு போட்டு மூடி வைக்கவும்.

பிறகு நன்றாக  வடிகட்டி சூடு ஆறவிடவும்.

மைதா, சோளமாவு,  அரிசி மாவு, உப்பு, மிளகாய் பொடி, மஞ்சள் பொடி அனைத்தையும் கலந்து ஒரு சல்லடையில் சலிக்கவும்.

ஒரு பேசினில் இவற்றை கொட்டி சுத்தப் படுத்திய காலிஃப்லவர்ரையும் சேர்த்து ஒரு அகலக் கரண்டியால் கலந்து .விடவும்.  மிக மிகக் கொஞ்சமாக நீர் தெளித்து  கைகளால் கலந்தால்  மாவு ஒரே சீராக எல்லா இடங்களிலும் ஒட்டும்.

இந்தக்  கலவையை ஒரு அரை மணி நேரம் ஃப்ரிட்ஜ் இல் குளிர வைக்கவும்.
பிறகு எடுத்து மிதமான தீயில் பொறித்து எடுக்கவும்.

பின் குறிப்பு:

மேற்சொன்ன முறையில் மாவை கலந்தால் மாவு தனியாகவும் காலி ஃப்லவர் தனியாகவும் போகாமல் நல்ல முழுமையாக பரவி இருக்கும்.  லேசாக நீர் தெளிக்கும் போது கவனம் தேவை.
காரம் அதிகம் வேண்டுமானால் சேர்த்துக் கொள்ளலாம்.
காலி ஃப்லவர் நார் சாத்து நிறைந்தது.  கேன்சர் நோய் வாராமல் பாதுகாக்கும்.<script>