Wednesday 28 December 2016

கருணை கிழங்கு மசியல்

கருணை கிழங்கு மசியல்




தேவையான பொருட்கள்:


கருணை கிழங்கு 400 கிராம்
மஞ்சள் தூள்  1 ஸ்பூன்

உப்பு  தேவையான அளவு
கொய்யா இலை 6
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

அரைத்து விட:

தேங்காய் அரை மூடி
பச்சை மிளகாய் 3
இஞ்சி ஒரு சிறு துண்டு
             

தாளிக்க:

கடுகு அரை ஸ்பூன்
எண்ணெய் 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் 1

ஒரு பெரிய எலுமிச்சை பழம்.
 
 
 கருணை கிழங்கு காரல் தன்மை அதிகம் கொண்டது.  அதன் காரணமாகவே பலர் அதை சாப்பிட மறுப்பர்.  பக்குவமாய் சமைத்து சாப்பிட்டால் நன்மைகள் பல உண்டு.

புதிய கிழங்கை காற்று படும்  திறந்த கூடையில் ஒரு இரண்டு வாரம் வைத்து விடுங்கள்.  பிறகு சமைத்தால் காரல் குறையும்.

கிழங்குகளை நன்றாக சுத்தம் செய்து நான்கு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். ஒரு குக்கர் அடுப்பில் ஏற்றி அடியில் நீர் விட்டு அதில் அரை ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கொய்யா இலைகளை கிள்ளிப் போட்டு கிழங்கை சேர்த்து வேக விடவும்.  நான்கு விசில் வரை வெந்தால் நல்ல மசிக்க வரும்.

[கொய்யா இலை கிடைக்கவில்லை என்றால் அரிசி களைந்த கழுநீர், மேலும் வாழை தண்டு சேர்த்தால் காரல் குறையும்]

வெந்த கிழங்கை தோல் உரித்து நன்றாக மசித்து விடவும்.

தேங்காய், பச்சை மிளகாய் இஞ்சி சேர்த்து மிக்ஸீயில்
அரைக்கவும்.

அடுப்பில் ஒரு கடாய் வைத்து கடுகு பச்சை மிளகாய் தாளித்து மசித்த விழுது, அரைத்த விழுது மஞ்சள் தூள் அரை ஸ்பூன், உப்பு சேர்த்து நீர் போதுமான அளவு விட்டு கொதிக்க விடவும்.  ஒரு கூட்டு பதமாக இருக்கலாம்.

அடுப்பிலிருந்து இறக்கி பின் எலுமிச்சை சாறு பிழிந்து விடவும்.  [தேவையானால் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணேய் சேர்க்கலாம், கொத்தமல்லி தழைகள் சேர்க்கலாம்]
நார் சத்து நிறைந்தது, மூல நோய்க்கு ஒரு மா மருந்து.  பருப்பு சாதம், சாம்பார் சாதம், வற்றல் குழம்பு சாதம்-இவற்றுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

No comments:

Post a Comment