Sunday 27 March 2016

கோதுமை அல்வா

                                                                             




தேவையான பொருட்கள்:
சம்பா கோதுமை ரவை : 1 கப்
சர்க்கரை: 2 1/2 [இரண்டரை] கப்
நெய் : 4 தேக்கரண்டி
முந்திரி: 6
ஏலக்காய்: 2

செய்முறை:
சம்பா கோதுமை ரவை யை நீரில் 2 மணி நேரம் ஊர வைக்கவும்.
மிக்ஸியையில் நன்றாக அறைக்கவும்.
ஒரு வடிகட்டியில் வடித்து வைத்துக்கொள்ளவும்.
ஒரு அரை கோப்பை நீர் சேர்த்து சர்க்கரையை ஒரு வாணலியில் போட்டுக் கலந்து அடுப்பில் வைத்துக் கிளரவும். தீ மிதமாக இருக்கலாம்.
சர்க்கரை கரைந்து ஒரு கம்பி பாதம் வந்ததும் வடித்து வைத்துள்ள சம்பா கோதுமை சாற்றை சேர்த்து கிளரவும்.
நன்றாக சேர்ந்து வரும்போது கொதிக்கும் நீரை கொஞ்சம் கொஞ்சம்மாக் ஊற்றி கிளரவும்.
கிளர கிளர கெட்டி ஆகிக் கொண்டே வரும்.
சுமாராக ஒரு அரை மணி நேரம் கிளறியவுடன் அல்வா நன்றாக .வெந்திருக்கும்.
ஒரு 3 தேக்கரண்டி நெய்யை விட்டு மீண்டும் கிளர கோதுமை அல்வா அநேகமாக தயார்.
மீதமுள்ள ஒரு தேக்கரண்டி நெய்யில் முந்திரியை ஒடித்து பொறித்து சேர்த்து, ஏலம் சேர்க்கவும்.
பின் குறிப்பு:
வண்ணம் சேர்ப்பது அவரவர் விருப்பமே.
Non-stick கடாயில் செய்தால் ஒட்டாமல் நன்றாக வருகிறது.
நன்கு கிளறினால் நல்ல துண்டம் போடவும் வரும்.
சர்க்கரை அளவு நெய் அளவு அனைத்துமே ஆரோக்கியம் கருதி கொடுக்கப் பட்டுள்ளது.
சர்க்கரைக்கு மாற்றாக வெல்லமும் உகந்ததே.
அனைத்து தர மக்களும் கொஞ்சம் அதிகம் சாப்பிட்டாலும் உடலுக்கு ஒன்றும் கெடுதல் ஏற்படக் கூடாது என்பதே குறி.



<script>
  (function(i,s,o,g,r,a,m){i['GoogleAnalyticsObject']=r;i[r]=i[r]||function(){
  (i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
  m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
  })(window,document,'script','https://www.google-analytics.com/analytics.js','ga');

  ga('create', 'UA-47810302-2', 'auto');
  ga('send', 'pageview');

</script>

     

No comments:

Post a Comment