Sunday 27 March 2016

வாழைக்காய் பொடி

தேவையான பொருட்கள்:

நல்ல முற்றிய வாழைக்காய்- 1

மிளகாய் வற்றல்- 5

பெருங்காயம்: ஒரு சுண்டைக்காய் அளவு

உளுந்தம்பருப்பு : 50 கிராம்

கடலை பருப்பு: 50 கிராம்

நல்லெண்னை : 1 தேக்கரண்டி

உப்பு: தேவையான அளவு


செய்முறை:

வாழைக்காயை குக்கரில் இரண்டு விசில் வரை வேக வைத்து எடுக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு மிளகாய் வற்றல், பெருங்காயம்,

உளுந்து, கடலை பருப்பு போட்டுபொன் நிறமாகச்சிவந்ததும் நன்றாக ஆர

வைக்கவும்.  மிக்ஸீயில் உப்பு சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும்.

வாழைக்காயை  கேரட் துருவுவது போல் துருவி, அரைத்த பொடியுடன் கலந்து வைக்கவும்.


பின் குறிப்பு:

அதிக எண்ணெய் செலவில்லை.  சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட நன்றாக இருக்கும்.  சுட்ட  அப்பளம் நல்ல பொருத்தமாக இருக்கும்.
தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ளவும் நன்றாக இருக்கும்.  சாப்பிட்டுப் பார்த்து உங்கள் மேலான கருத்தைக் கூறவும்.

<script>
  (function(i,s,o,g,r,a,m){i['GoogleAnalyticsObject']=r;i[r]=i[r]||function(){
  (i[r].q=i[r].q||[]).push(arguments)},i[r].l=1*new Date();a=s.createElement(o),
  m=s.getElementsByTagName(o)[0];a.async=1;a.src=g;m.parentNode.insertBefore(a,m)
  })(window,document,'script','https://www.google-analytics.com/analytics.js','ga');

  ga('create', 'UA-47810302-2', 'auto');
  ga('send', 'pageview');

</script>


No comments:

Post a Comment